கடந்தவருடம்
மே மாதத்தில் பாகிஸ்தானில் வைத்து அல்-கயீடா இயக்கத்தின் தலைவர் ஒசாமா
பின்லேடன் கொல்லப்பட்டிருந்தார். அமெரிக்க விசேட கொமாண்டோக்களின் திடீர்
தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை தெரிந்ததே.
பாகிஸ்தானின் அப்பொட்டாபாத் நகரத்தில் இருக்கின்ற, ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீட்டினை அதிகளவான மக்கள் சென்று பார்த்து வந்தனர். மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த வீட்டினை சுற்றி பாரிய மதில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே பாகிஸ்தானின் உயரதிகாரிகளினால் ஒசாமா பின்லேடன் கொலைசெய்யப்பட்ட குறித்த வீடு நேற்று சனிக்கிழமை இரவு இடிக்கப்பட்டுள்ளது.
தெரு விளக்குகளை அணைத்துவிட்டு பலத்த இராணுவ, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில் பாரிய இயந்திரங்களைக் கொண்டுவந்து ஒசாமாவின் வீட்டினை இடிக்க ஆரம்பித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட அயலவர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.