ஐ.
பி. எல். 20-20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து சுழற்பந்து
வீச்சாளர் கிராம் ஸ்வானுடன் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தனவுக்கு அதிக
தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐ. பி. எல். தொடரில் கொச்சி அணித் தலைவராக செயற்பட்ட மஹேல, இம்முறை ஐ. பி. எல். இல் இருந்து அந்த அணி நீக்கப்பட்டதால் ஏலத்தில் விடப்படவுள்ளார்.
பெங்களூரில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 144 பேர் ஏலம் விடப்படவுள்ளனர். இதில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜோன்ஸன், பீட்டர் சிடில் மற்றும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்ஸன், இயன் பெல் ஆகியோருக்கும் அதிக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் அடுத்த ஐ. பி. எல். இல் பங்கேற்கவுள்ள 5 அணிகளும் அதிகபட்சமாக 2 மில்லியன் டொலர்களை செலவு செய்து வீரர்களை வாங்கமுடியும். 5 ஆவது ஐ.பி. எல். தொடர் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.