இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக விமானமொன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள தும்மல சூரிய என்ற பகுதி வான் பரப்பில்
பறந்த போது, நிகழ்ந்த இவ் விபத்தில் அந்த விமானம் முற்றக எரிந்து போனதாகத்
தெரிய வருகிறது.
விமானப்படை பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த விமானம்
விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை அறிந்து
கொண்ட விமானி பாதுகாப்பு கருதி உடனடியாக பராசூட் மூலம் விமானத்தில் இருந்து
குதித்து விட்டதாகவும், பின்னதாக விமானம் அப்பகுதியில் உயரந்த தென்னை
மரங்கள் நிறைந்த பகுதியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதாகவும்
அறியப்படுகிறது.
விமானப்படை தளபதி எயார் மார்சல் ஹர்ஸ அபேவிக்ரம இது தொடர்பில் கருத்துத்
தெரிவிக்கையில் இவ் விபத்துத் தொடர்பான விசாரணைகள் உடனடியாக
ஆரம்பிக்கப்படம் எனவும், இதற்கான விசாரணைக்குழு ஒன்று நியமிக்கபடும்
விசாரணைக்கு அந்த விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும்
அறிவித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகள் மீதான வான் தாக்குதல்களை விமானப்படையினர் மேற்கொண்ட
போது, மிக் 27ரக விமானங்கள் அவற்றில் பயன்படுத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தின் பின் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று
முன்னர் விபத்துள்ளாகியிருந்தது. அதில் ஒரு விமானி பலியாகியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்றுள்ள விபத்து இரணடாவது எனவும்
குறிப்பிடப்படுகிறது.