முஹம்மது
நபி (ஸல் ) அவர்களின் வருகையை முன் கூட்டி எதிர்வு கூறும் 1500 வருட பழைமை
வாய்ந்த பைபிள் ஒன்றை வத்திகான் இவ்வாரம் பார்வையிட்டுள்ளது
கடந்த 12 வருடமாக துருக்கியில் மறைத்து பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த
இந்த அரிய 1500 வருட பழைமை வாய்ந்த பைபிளை பார்வையிட போப் பெனடிக்ட்
வேண்டுகோள் விடுத்தமைக்கு இணங்க இந்த பைபிள் வத்திகானுக்கு கொண்டு
செல்லப்பட்டிருந்தது
அந்த பைபிளில் முஹம்மது நபி (ஸல் ) வருகையை ஈஸா(அலை) ) முன்கூட்டியே
எதிர்வு கூறிய வாசகங்கள் காணப்படுகின்றன.இந்த வாசகங்களை கிருஸ்தவர்கள்
இதுவரை ஏற்றுகொள்ளாத நிலையில் வத்திகான் இந்த பார்வையிடலை மேற்கொண்டுள்ளது
"இஸ்லாமிய அடிப்படையில் ஈஸா நபியை இறைவனாக நம்பாது இறைவனின்
தூதுவர்களில் ஒருவராக நம்பப்படுகிறது.அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்ற
கூற்றும் மறுக்கப்படுகிறது .ஈஸா நபி அவர்கள் முஹம்மது நபி (ஸல் ) வருகையை
எதிர்வு கூறியுள்ளார் ." என்று துருக்கியின் கலாசார உல்லாச பயண துறை
அமைச்சர் ஏற்துக் குருல் குணை கூறியுள்ளார்
இந்த பைபிளை கடத்தி செல்ல முயன்ற போது 2000 ஆம் ஆண்டில் வைத்து துருக்கியில் அந்நாட்டு அரசினால் கைப்பற்றப்பட்டதுகைப்பற்றப்பட்ட பல்வேறு பொருட்களுடன் அங்காராவில் உள்ள நூதன சாலையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது
ஈஸா நபியின் அரமைக் மொழியைக்கொண்டு தோளில் தங்கத்தால் எழுதப்பட்ட இந்த
பைபிளின் ஒரு பக்கமே 2 .4 மில்லியன் டொலர் பெறும் என்று கூறப்படுகிறது .
அதில் உள்ள ஒரு அத்தியாயத்தில் ஈஸா நபி, அவர்கள் முஹம்மது நபி (ஸல்)
அவர்களின் பேரை சொல்லி அவரின் வருகையை அவரது சீடர் ஒருவருக்கு எதிர்வு
கூறியுள்ளார் .
கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் தற்போது உள்ள பைபிளில் அடிப்படை
கொஸ்பல்கலான மார்க் ,மத்தேயூ,லூக்,ஜோன் ஆகியவற்றுக்கு மேலதிகமாக உள்ள
கோஸ்பல் பார்ணபஸ் என்று கூறப்படுகிறது .
பார்ணபஸ் என்பவர் சைபிரஸ் கிறிஸ்தவத்தை ஸ்தாபித்தவர் என்று வரலாற்றில் கூறப்படுகிறது .
பார்ணபஸ் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த போதும் கண்டு
பிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
என்று புரட்டஸ்தாந்து பாதிரியார் இஹ்சான் ஒச்பேக் வாதித்துள்ளார் .இந்த
பைபிள் பார்ணபஸ் ஐ பின்பற்றும் நபரால் 500 வருடம் கழித்து எழுதப்பட்டதாக
இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்
எனினும் இந்த பைபளின் பழைமை குறித்து விரைவில் விஞ்ஞான ஆராய்ச்சிகள்
நடத்தப்படவுள்ளதுடன் அது எழுதப்பட்ட காலம் குறித்தும் விரைவில் ஆராய்ச்சி
நடைபெறவுள்ளது