எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பொருட்கள் சிலவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மின்சார கட்டணம், வெதுப்பக உற்பத்திகள், பேரூந்து கட்டணம் என்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அரிசியின் விலையினை அதிகரிக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்திக்காக உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் மூலம் இயங்குவதே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது செய்திப் பிரிவு அகில இலங்கை நெல் குத்தும் உரிமையாளர் சங்க தலைவர் டட்லி சிரிசேனவிடம் வினவியது.
அதற்கு பதில் அளித்த அவர் அரிசியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டார்.