சிறிலங்காவுக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படம் ஒன்றை சனல்-4 தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது சிறிலங்காப்படையினர் அட்டூழியம் புரிந்தததையும் போர்விதிகளை மீறியதையும் காட்சிகளாக உள்ளடக்கி, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சி "சிறிலங்காவின் கொலைக்களம்" என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றை முன்பு வெளியிட்டது. குறித்த ஆவணப்படம் சிறிலங்கா அரசின் விமர்சனங்களுக்கு உள்ளானதுடன் கலக்கத்திற்கும் ஆளாக்கியிருந்தது. அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தது. இந் நிலையில் அதுபோன்றதொரு ஆவணப்படத்தை சனல்-4 வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக இந்த ஆவண்பபடம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக வெளியிடப்பட்ட கொலைக்களம் ஆவணப்படத்தை தொகுத்து வழங்கிய ஜொன் ஸ்னோவ் இப் புதிய ஆவணப்படத்தையும் வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
சிறிலங்காவின் கொலைக்களம் சனல்-4ன் மற்றுமொரு புதிய ஆவணப்படம்
Labels:
இலங்கை