பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தற்போது காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அந்நாட்டு
நடிகை மீரா அளித்த பேட்டியில், அக்தர் தன்னை நீண்டநாளாக காதலித்து
வந்ததாகவும், அதை நான் ஏற்று கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
என்னை காதலித்த அதேசமயத்தில் எனது உறவுப்பெண் ஒருவரையும் அக்தர் காதலிக்க முயற்சி செய்தார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து
அக்தர் கூறுகையில், நான் ஏன் மீராவை காதலிக்க வேண்டும். இதில் எந்தவித
உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
பல பெண்கள் என்னை மணக்க கனவு காண்பது சகஜம் தான் என்றார்.