பஸ் கட்டணங்கள் 20 சதவீதத்தால்
அதிகரிக்கப்பட்டு ஒருவாரமாகும் நிலையில், மேலும் இரு சதவீதத்தால் பஸ்
கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி கோருவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள்
தீர்மானித்துள்ளனர்.
புதிய பஸ் கட்டணங்களை
அறிமுகப்படுத்துவற்கு முன்னர் பஸ் கட்டணங்களை அதிகாரிகள் முறையாக
கணிப்பதற்குத் தவறிவிட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இது தொடர்பாக கூறுகையில், நாட்டில்
தனியார் பஸ் சேவைகளின் 95 சதவீதத்தை உள்ளடக்கிய தமது சங்கமானது பஸ்
கட்டணங்களை 2 சதவீதத்தால் உடனடியாக அல்லது எதிர்வரும் ஜுலை மாதம்
அதிகரிக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் எழுத்துமூலம் கோரவுள்ளதாக
கூறினார்.