தனக்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங்.
அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது டிவிட்டர் இணையதளத்தில், சிகிச்சை முடிந்து திடகாத்திரமான மனிதராக இந்தியா திரும்புவேன். எனக்காக பிரார்த்திருக்கும் மக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகங்கள் அளிக்கும் ஆதரவுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன், என்று கூறியுள்ளார்.
மீண்டும் திரும்பி வந்து எனது கிரிக்கெட் உடையையும், தொப்பியையும் அணிந்து கொண்டு இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தோடும் நம்பிக்கையோடும் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த நோய் குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்ததாகவும், பின்னர் ஆலோசகர் ஒருவரின் அறிவுரையால் மனம் தெளிவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.