அம்பாறை
கிறீட் உப மின் நிலையத்தின் திருத்தவேலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில்
எதிர்வரும் சனிக்கிழமை (11), ஞாயிற்றுக்கிழமை (12) ஆகிய இரு தினங்களில்
மின்சாரம் தடைப்படும் என அம்பாறை பிராந்திய மின்பொறியியலாளர்
அறிவித்துள்ளார்.
அம்பாறை நகர், கொண்டவட்டுவான்,
பறக்காகலே, மஹோயா, இக்கினியாகல, சேரன்கட, நாமல்ஓயா, வளத்தாப்பிட்டி,
மல்வத்தை, மத்திய முகாம், ஹிங்குராணை, தீகவாபி, தமண, இறக்காமம்,
அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணம, சியம்பலாண்டுவே, ஆகிய
பிரதேசங்களிலும் கல்முனை மின்பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை,
சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி,
பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை, நற்பிட்டிமுனை,
சேனைக்குடியிருப்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர்,
அட்டப்பளம், காரைதீவு ஆகிய பிரதேசங்களில் மின் தடைப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு
மின்பொறியியலாளர் பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை மின்வெட்டு
அமுலில் இருக்கும் எனவும் மின்பொறியியலாளர் தெரிவித்தார்.