பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள்
தலைவரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்ஸாவ் (பி.ரி.ஐ.) கட்சியின்
தலைவருமான இம்ரான் கானின் பிரசாரக் கூட்டமொன்றுக்கு அருகில் நேற்று முந்தினம் இரவு 7
மணியளவில் குண்டுவெடிப்புநிகழ்ந்துள்ளது.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 11 பேர்
காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பின் போது தனக்கு எவ்வித சேதமும்
ஏற்படவில்லை என்றும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் இம்ரான் கான்
தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் இந்தக்
குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இம்ரான்கானின் கூட்டம் முடிவடைந்தபோது
கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து பலத்த துப்பாக்கிப்
பிரயோகங்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.