இலங்கையில் பொலிஸ் மற்றும் அரசியல்
கட்சிகளே அதிக ஊழல் நடைபெறும் நிறுவனங்கள் என இலங்கை மக்களில் ஏறத்தாழ 50
சதவீதமானோர் கருதுவதாக ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் நடத்திய
கணிப்பீடொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 1000 பேரிடம்
இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பொலிஸாரின் சேவைகளில் மக்கள் மிகக்
குறைந்த நம்பிக்கையையே கொண்டிருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. அரச
திணைக்களங்கள் மீதும் மக்கள் அதிகளவில் அவநம்பிக்கை கொண்டிருப்பதை இந்த
ஆய்வு வெளிப்படுத்தியது.
பொலிஸாருக்கு அடுத்ததாக வருமானவரி
திணைக்களம், சுங்கத் திணைக்களம், மற்றும் கச்சேரிகள், பிரதேச செயலாளர்
அலுவலகங்கள், பிரதேச சபைகள் காணிப் பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில்
மக்கள் அதிக அவநம்பிக்கை கொண்டிருப்பதாக ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனலின்
பேச்சாளர் ஷான் விஜேதுங்க கூறினார்.
இந்தப் பட்டியலில் அடுத்ததாக நீதித்துறை,
கல்வி, சுகாதார சேவைகள் என்பன உள்ளன. கருத்துக்கணிப்பில்
பங்குபற்றியவர்களில் 23 சதவீதமானோர், ஒரு குறித்த சேவையைப் பெறுவதற்காக
தாம் லஞ்சம் வழங்கியுள்ளதாகக் கூறினர்.
இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான்,
நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளிலும் இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்படி, தெற்காசியாவில் அரச நிறுவனங்களில் அதிக ஊழல் நிலவும்
நாடாக பங்களாதேஷ் (66 சதவீதம் ) உள்ளது. ஊழல் குறைந்த நாடாக மாலைதீவு (6
சதவீதம்)