
அமெரிக்கா சிறிய நாடுகளைத் தண்டிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஈரான் மீது பிறப்பித்துள்ள பொருளாதாரத் தடை
இலங்கை போன்ற சிறிய நாடுகளை பெரும் கவலைக்குஉள்ளாக்கியுள்ளது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பெரும்பான்மையான எரிபொருள் தேவையை ஈரான் பூர்த்திசெய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான்
மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தடையினால் ஏற்படக் கூடியவிளைவுகள் குறித்து
கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் ஏழு மாத கடன் அடிப்படையில் நாட்டின் மொத்த எரிபொருள்தேவையில் 93 வீதத்தை பூர்த்தி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாற்று
ஏற்பாடுகள் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அமெரிக்கா உண்மையில்
ஈரானைத் தண்டிக்கவில்லை எனவும் சிறிய நாடுகளையேதண்டிப்பதாகவும் ஜனாதிபதி
குற்றம் சுமத்தியுள்ளார்.
பொருளாதாரத்
தடையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களைஈடு செய்ய அமெரிக்கா
ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள்
இறக்குமதி பிரச்சினை தொடர்பில் சீனா மற்றும் இந்தியா ஆகியநாடுகளின்
ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இலங்கை வர்த்தக ரீதியான உறவுகளையே பேணி வருகின்றது – ஜனாதிபதி
சீனாவுடன் இலங்கை வர்த்தக ரீதியான உறவுகளையே பேணி வருகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல்
ரீதியான உறவுகள் எதனையும் இலங்கை பேணவில்லை எனவும், சீனாவுடன் வர்த்தக
ரீதியான உறவு பேணப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் சீனாவை முதலீடு செய்ய அழைக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.