முறையான திட்டங்கள் இல்லாமல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக்
கொடுக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள்
சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று பட்டம் பெற்ற வருடத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அந்த சங்கத்தின் இணைப்பாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான்தோன்றித் தனமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பெயர் பட்டியலை உடனடியாக இரத்து செய்து முறையான திட்டத்தின் மூலம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.