இந்திய
அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் விரைவில் குணமடைய வேண்டும்
என்று இந்திய கேப்டன் டோனி, தொடக்க வீரர் கம்பீர் ஆகியோர் விருப்பம்
தெரிவித்துள்ளனர்.
அவர்
புற்றுநோயிலிருந்து மீண்டு, பலம் பொருந்திய வீரராக மீண்டும் அணிக்குத்
திரும்புவார் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயால்
பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங், இப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று
வருகிறார். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுடனான வெற்றிக்குப் பிறகு டோனி
கூறியது: யுவராஜ் சிங் விரைவில் குணமடைய வேண்டும். அவர் சவாலை
விரும்புபவர். மீண்டும் பலமான வீரராக அவர் அணிக்குத் திரும்புவார் என்று
நம்புகிறேன் என்றார்.
யுவராஜ்
குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ள கம்பீர், "யுவராஜ் விரைவில் குணமடைய
விரும்புகிறேன். அவுஸ்திரேலியாவில் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர். அவர்
இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு' என்றார்.
ஆட்டத்தின்
கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்தது குறித்துப் பேசிய தோனி, "இந்த சிக்ஸர்
சிறப்பு வாய்ந்தது. தேவைப்பட்ட நேரத்தில் சிக்ஸர் அடித்தேன். இதேபோல் உலகக்
கோப்பையில் அடித்த சிக்ஸரும் சிறப்பானது. உலகக் கோப்பையைப் பொறுத்தவரையில்
ஒரு ரன் எடுத்தாலே போதும் என்ற நிலையில் சிக்ஸர் அடித்தேன்' என்றார்.