2012 க.பொ.த உ/த பரீட்சையில் தோற்ற விருப்பமா? அழைக்கவும் 1911

2012 க.பொ.த உ/த பரீட்சையில் தோற்ற விருப்பமா? அழைக்கவும் 19112012 ஒகஸ்டில் க.பொ.த உ/த பரீட்சையில் தோற்றுவதற்கு புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு விசேட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அது பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 1911 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தனியார் பரீட்சாத்திகள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று அதில் உள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பி பரீட்சை கட்டணத்தை தபால் அலுவலகத்தில் செலுத்தி ரசீட்டை தொலைநகல் செய்ய வேண்டும்.

பாடசாலை பரீட்சாத்திகள் அதிபரின் கையொப்பத்துடன் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி பரீட்சைகள் திணைக்களத்திற்கு தொலைநகல் செய்ய வேண்டும்.

நாளை தொடக்கம் 27ம் திகதிவரை தபால் மற்றும் தொலைநகல் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு அழைக்கவும் - "1911" அல்லது 0112 784 208 , 0112 784 537, 0112 786 200, 0112 784 201, 0112 785 202, 0112 784 204, 0112 786 205, 0112 784 206, 0112 787 207.

தொலைநகல் - 0112 785 220 , 0112 785 779 , 0112 784 422

2012 க.பொ.த உ/த பரீட்சை ஒகஸ்ட் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now