களனி
பிரதேச சபைக்கும் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்குமிடையில் எழுந்துள்ள
பிரச்சினைகள் தொடர்பில் 82 பேரிடமிருந்து பொலிஸார் வாக்கு மூலங்களைப்
பெற்றுள்ளனர். அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் களனி பிரதேச சபை
ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் உட்பட்ட 82 பேரிடமே இந்த வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அமைச்சர் மேர்வினிடமிருந்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என். ஏ. ரி.
ஜெயசிங்க வாக்கு மூலத்தைப் பெற்றுள்ளார். இதன் முழுமையான அறிக்கை பொலிஸ்மா
அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது