மாவிலான
பொருட்களை உற்பத்தி செய்யும் இரு நிறுவனங்கள் தங்களது உற்பத்திப்
பொருட்களுக்கான விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு நுகர்வோர்
பாதுகாப்பு அதிகார சபையைக் கேட்டுள்ளன. பிறிமா மற்றும் செரண்டிப் ஆகிய
நிறுவனங்களே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. இருப்பினும் மா மீதான
இறக்குமதித் தீர்வையைக் குறைத்தால் தமது உற்பத்தி பொருட்களுக்கான விலை
அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனச் சுட்டிக் காட்டியுள்ள இந்த
இரு நிறுவனங்களும் அல்லாது விடத்து தமது உற்பத்தி பொருட்களின் விலைகளை ரூ 6
தொடக்கம் ரூ 7 வரை அதிகரிக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளன