ஓரினச் சேர்க்கை வழக்கு விவகாரத்தில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக இந்திய மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில், இவ்விவகாரத்தில் ஒத்த கருத்து கொண்டவர்கள் சேர அனுமதி மறுக்க வேண்டிய அவசியமில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஓரினச் சேர்க்கை குற்றச் செயல் என்றும், அதனால், நாட்டின் கலாச்சாரம் பாதிக்கும் என்றும் மத்திய அரசு இதுவரை கூறி வந்தது. ஆனால், இன்று இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
ஓரினச் சேர்க்கை குற்றச் செயல் அல்ல என்று கூறுவதில் தவறில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த மாறுபட்ட கருத்துகளால் அதிருப்தியடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கண்டித்தனர்.
நீதிமன்ற தீர்ப்புகள் விமர்சனங்களுக்கு உட்படுத்த முடியாதவை என்பதால் இந்த செய்திக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறோம். நன்றி.