அமெரிக்காவின்
அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியுடன் அந்நாடே பரபரப்பாக
காட்சியளிக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவி காலம்
முடிவடைவதையொட்டி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஒபாமாவுக்கு
போட்டியாக குடியரசுக் கட்சி சார்பில் யாரை நிறுத்தலாம் என்று அமெரிக்காவில்
உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்சி அளவில் தேர்தல் நடந்து வருகிறது.
இதில் மிட் ரோம்னி, ரிக் சந்தோரம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மச்சா சூசெட்ஸ் மாநில முன்னாள் தலைவரான ரோம்னி 3 மாநிலங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். மொத்தம் அவர் 4 மாநிலங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதுபற்றி ரிக் சந்தோரம் கூறுகையில், இந்த வெற்றி தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும் இன்னும் பல மாநிலங்களில் கட்சி அளவில் நடக்க இருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற்று ஒபாமாவை எதிர்க்கும் வேட்பாளராக தெரிவாக வேண்டும். அதன் பின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.