அத்தியாவசிய பொருட்களை நிர்னயிக்கப்பட்ட விலைக்கேற்ப விற்பனை செய்யாது
மேலதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு
தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் அத்தியாவசியப்
பொருட்களின் விலைகளையும் அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்கள்
தொடர்பில் முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக கூட்டுறவு மற்றும்
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன
தெரிவித்துள்ளார்.
பொருட்களை உரிய விலையில் விற்பனை செய்யாது அதிகப்படியான விலையில்
விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தாம் கடுமையான நடவடிக்கை அடுத்த
வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.