மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக இந்திய அணித்தலைவர் தோனிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய
அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற முத்தரப்பு தொடரின் ஏழாவது லீக் போட்டியில்
இந்திய அணி மெதுவாக பந்துவீசியதற்காக அணித்தலைவர் தோனிக்கு ஒரு போட்டியில்
விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் தோனி பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று
டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக அடிலெய்டில் நடந்த 4வது
டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் தோனி விளையாட தடை விதிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.