களனி மற்றும் அதனை அண்மித்த பிரதேசமொன்றில் தேவையான களிமண் வளம் கண்டறியப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் கலாநிதி என்.பீ.விஜயானந்த குறிப்பிட்டார்.
இந்த வளத்தைக் கண்டுபிடிப்பதற்கான திட்டம் மூன்று கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக களனி கங்கையின் வடபகுதியிலும் அடுத்த கட்டமாக களனி கங்கையிலிருந்து களுகங்கை வரையிலும் இறுதிக் கட்டமாக களனி கங்கையிலிருந்து நில்வலா கங்கை வரையிலும் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக புவியியல் அகழ்வாராய்ச்சிப் பணியகத்தின் தலைவர் கூறினார்.
இதன்போது ஒரு சில இடங்களில் பீஙகான் மற்றும் தரை ஓடு தயாரிப்பதற்குப் பயன்படும் களிமண் வளம் கண்டறியப்பட்டதாகவும் அது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.