சிங்கப்பூரில் கணினி இணையம் மூலம் விபசாரம் நடப்பதாக போலிஸ்
சந்தேதிக்கிறது. அது பற்றி விசாரணை நடக்கிறது. விபசாரத்தை ஒடுக்கும் தங்கள்
அமுலாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக போலிசார் இந்தப் புலன் விசாரணையை
நடத்தி வருகிறார்கள்.
பொதுத் தகவல் சாதனங்களின் கேள்விக்குப் பதில் அளித்த போலிஸ் பேச்சாளர்
இந்த விவரத்தைத் தெரிவித் தார். புலன்விசாரணையில் சுமார் 80 பேர்
சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களில் அரசாங்கத் துறை ஊழியர்களும்
இருக்கிறார்கள் என்றும் ஒருவர் புகழ்பெற்ற ஒரு பள்ளிக்கூட முதல்வர்
என்றும் நம்பப்படுகிறது.
அந்த முதல்வருக்கு வயது 39. அவர் மணமானவர். கல்விச் சேவையில் இருந்து கடந்த டிசம்பரில் அவர் விலகிவிட்டார்.
விசாரிக்கப்பட்டு வரும் மற்றவர் களில் சீருடைச் சேவைகளைச் சேர்ந்த
வர்களும் இதர அமைப்புகளைச் சேர்ந்த வர்களும் அடங்குவர். படிப்பு உபகாரச்
சம்பளம் பெற்ற ஒருவரும் விசாரிக்கப் பட்டு வருவதாக நம்பப்படுகிறது என்று
லியன்ஹ வான்பாவ் நாளிதழ் தெரிவித் துள்ளது.