காயம்
காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய ஹர்பஜன் சிங் சிகிச்சை மேற்கொண்டு
முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் மீண்டும் களமிறங்குகிறார்.
இவர் எதிர்வரும் 20ம் திகதி தொடங்கும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரில் களமிறங்குகிறார்.
இதுகுறித்து
ஹர்பஜன் சிங் கூறியது: காயத்தில் இருந்து மீண்டு கிரிக்கட் போட்டிகளில்
விளையாட தகுதி பெற்று விட்டேன். தொடர்ந்து பந்துவீச்சி செய்ததில் எவ்வித
பிரச்னையும் இல்லை.
தற்போது
இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்காக
விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணிக்கு கப்டனாக செயல்படுவேன். இதில் முழு
அளவில் செயல்பட்டு சாதிக்க முயற்சிப்பேன்.
இதில்
சிறப்பாக செயல்பட்டுவிட்டால் இந்திய அணிக்கு திரும்பலாம். ஐ.பி.எல்
மட்டுமன்றி இங்கிலாந்தில் கவுன்டி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற
கருத்தும் மோசமானது அல்ல. ஆனால் இது இந்திய கிரிக்கட்
வாரியத்தின்(பி.சி.சி.ஐ) முடிவை பொறுத்தது என்றார்.