சரத்பொன்சேகாவை ஜ.நா மனித
உரிமைக் கூட்டத்தொடருக்கு அனுப்பினால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம்
வலுவிழக்கும் என்று முன்னாள்பிரதம நீதியரசர் சரத் என் சில்வா
தெரிவித்துள்ளார்.
தொழில்சார் புத்திஜிவிகளின் சந்திப்பு நேற்று காலி நகரமண்டபத்தில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார் ஜ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்கள் வந்தாலும் இறுதிக்கட்ட யுத்தத்திற்கு தலைமை தாங்கிய சரத்பொன்சேகாவால், அதை முறியடிக்க முடியும். இலங்கையிலிருந்து ஜ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்குபற்ற 52 பேர் அடங்கிய குழு ஒன்றினை அரசு அனுப்பிவைத்துள்ளது இவர்களை அனுப்புவதை விட சரத்பொன்சேகாவை அனுப்பியிருக்கலாம் அவர்தான் போர்குற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடவும் அதனை எதிர்கொள்ளவும் சிறந்தவர் மனித உரிமைக் கூட்டத்தொடரில் சரத்பொன்சேகா பயங்கரவாதிகளுடனான போரிலேயே தான் போரிட்டதாகவும் தன்னைக் கொல்ல மூன்று முறை குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டதாகவும் கூறினால் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளால் கொண்டுவரப்படும் போர்குற்ற வலுவிழந்து விடும் என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். |
சரத்பொன்சேகாவை அனுப்பினால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் வலுவிழக்கும்
Labels:
இலங்கை