Twitter பயன்பாடு உடல் நலத்திற்கு கேடு - எச்சரிக்கை

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரிலேயே பல மணி நேரங்களை செலவழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல என அந்நிறுவனத்தின் இயக்குனரான பிஜ் ஸ்டோன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தற்போது டுவிட்டரை உலகம் முழுவதும் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் பல மணி நேரங்கள் அதாவது 12 மணி நேரம் வரை செலவழிக்கின்றனர். இது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. இதுபோன்ற சமூக வலைத்தளம் அல்லது இணையத்தளத்தை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக, நீங்கள் விரும்பும் ஒன்றைப் பார்ப்பதற்காக, நீங்கள் விரும்புவதைக் கற்றுக் கொள்வதற்காக அணுகலாம். அதுதான் நலமான வழி என்றார். இவர் டுவிட்டரின் நிறுவனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now