தீர்க்க
முடியாத நோய்களுக்கு (euthanasia) மூலம் நோவின்றி மரணத்தை ஏற்படுத்துவதை
சட்டபூர்வமாக்குவதற்கு சுவிஸ் நாட்டின் வோட் என்ற மாநில பாராளுமன்றம்
இணங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை சமூக
ஜனநாயக கட்சி உறுப்பினர் கொண்டு வந்தார். வைத்தியசாலைகள், மருத்துவ
நிலையங்கள் ஆகியவற்றில் கடுமையான நிபந்தனைகளின் கீழ் தீராத வியாதியினால்
அவதிப்படும் நோயாளிகளுக்கு நோவின்றி மரணத்தை ஏற்படுத்துவதற்கு இச்சட்டம்
அனுமதியளிக்கின்றது.
தீர்க்க முடியாத நோய் என்று வைத்திய
நிபுணர்கள் அத்தாட்சிப்படுத்த வேண்டும். நோயாளியும் சொந்தமான முடிவு
எடுக்கும் மனநிலையில் இருக்க வேண்டும் என்று நகல் சட்டம் தெரிவிக்கின்றது.
உறவினர்களும் அதனை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடவேண்டும் என சட்ட மூலத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.