013 இறுதிக்குள் யாழ்தேவி கிளிநொச்சிவரை பயணிக்கும் வாய்ப்பு


வடக்கிற்கான புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் மிகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரை ஒரு பகுதியாகவும் கிளிநொச்சி, பளையிலிருந்து காங்கேசன்துறை வரைக்கும் இன்னொரு பகுதியாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதற்கான தண்டவாளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கிளிநொச்சியிலும் பளையிலும் கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது புகையிரத சேவை வவுனியா ஓமந்தை வரைக்கும் நடைபெறுகிறது. 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் யாழ்தேவி கிளிநொச்சி வரும் என தெரிவிக்கப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now