அவசர
மருத்துவ அம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள புதிய இலகுவான தொலைபேசி இலக்கம்
110 அறிமுகப்படுத்தப்பட்டது. அவசர அம்புலன்ஸ் சேவை தொடர்பாடல்களை
ஒருங்கிணைக்க பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அவசர அழைப்பு நிலையம்
(Emergency call centre) ஆரம்பிக்கப்பட்டது.
இங்கு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் பயிற்சியின்
பின் பணிக்கமர்த்தப்பட்டனர். எனினும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சில
வலையமைப்புகளில் தொலைபேசி இலக்கம் 110 அழைக்கும்போது அநுராதபுரத்திற்கு
அழைப்பு செல்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே அவசர மருத்துவ அம்புன்ஸ் சேவையை அழைப்பதற்கு தொலைபேசி இலக்கம் 110 ஜ
அழைக்கவும் அல்லது 021 222 5555 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொண்டு அவசர
மருத்துவ அம்புன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.