அநுராதபுரம் தாதியர் கல்லூரியில் பயிற்சி பெற்ற தாதியர்கள் பயிற்சிகளை நிறைவு செய்து நேற்று வெளியேறினார்.
உன்னதமிக்க சுகாதார சேவையின் பெருமை தாதியருக்கே உரித்தாவதாக இதன்போது குறிப்பிட்ட அமைச்சர், தமது 22 மாத சேவைக்காலத்தில் சகல பிரிவுகளிலிருந்தும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
பொது மக்கள், நிறுவனங்கள், சேவையாளர்கள், அதிகாரிகள் போன்ற பல பிரிவினரினதும் முறைப்பாடுகளை அவதானிக்கையில் பெரும்பாலானவை பாலியலுடன் தொடர்புடையதாகவே காணப்படுவதாக அமைச்சர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சு தாம் வகிக்கின்ற ஒன்பதாவது அமைச்சுப் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், இதுபோன்று பாலியலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் பதிவாகும் அமைச்சொன்றை தாம் இதுவரையும் கண்டதில்லை என்றும் கூறினார்.