பண்டாரவளை சிறுவர் இல்லம் ஒன்றில் திடீர் சுகயீனமுற்ற குழந்தை ஒன்று பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
பண்டாரவளை நீதவானின் உத்தரவின் பேரில் சுஜானா சிறுவர் இல்லத்தில் இருந்த 3 மாதமும் 8 நாட்களும் நிறைந்த குழந்தை கடந்த 23ம் திகதி மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
குறித்த குழந்தையின் சடலம் மீது தியத்தலாவை வைத்தியசாலையில் நேற்று (25) பிரேத பரிசோதனை இடம்பெற்றது.
குழந்தைக்கு வழங்கப்பட்ட பால் சுவாசப் பை மற்றும் சுவாச நாளம் என்பவற்றிற்குச் சென்றதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
13 வயது 10 மாதம் நிறைந்த சிறுமி ஒருவருக்கு கிடைத்த இந்தக் குழந்தை நீதிமன்ற விசாரணையின் காரணமாக சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
