இலங்கை
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவவும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட
பின்தங்கிய பிரதேசங்களின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்து உதவவும்
ஜப்பானிய அரசாங்கம் சுமார் 1.55 பில்லியன் ரூபாவை நன்கொடையாக
வழங்கியுள்ளது.இதில் 455 மில்லியன் ரூபா சுகாதார சேவைகளை முன்னேற்றுவதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்யவும் பின்தங்கிய பிரதேசங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதியை ஏற்படுத்தவும் கிராமிய வீதி வலையமைப்புக்களை அமைக்கவும் வழங்கப்படுகின்றது.
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தே சுகாதார சேவை உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இந்த உதவியிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வழங்கல் தொகுதியை புனரமைக்க சுமார் 1.206 பில்லியன் ரூபா பயன்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் களனி மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் ஜப்பானிய மொழி கற்றலுக்கான உபகரணங்களை புனரமைக்க மற்றும் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய 73 மில்லியன் ரூபா இந்த நிதியுதவியிலிருந்து பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த நிதியுதவி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மற்றம் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.வி.ஜயசுந்தர ஆகியோருக்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் கையெழுத்திடப்பட்டது.

