தென்
ஆப்ரிக்காவுக்கு எதிரான டுவென்டி-20 போட்டியில் இந்திய அணி,
டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக
தோல்வி அடைந்தது.
தென்
ஆப்ரிக்க மண்ணில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை
கொண்டாடும் வகையிலும், மூத்த வீரர் காலிசை கௌரவிக்கவும், நட்பு ரீதியிலான
டுவென்டி-20 போட்டி நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்தது.
இதில்
கிடைக்கும் நிதி காலிஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். நாணய சுழற்சியில்
வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு தொடக்கத்தில் லெவி(19) ஏமாற்றினார். பின் காலிஸ், இங்கிராம் இணைந்து அசத்தினர்.
இவர்கள்
இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்க, ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.
வீரட் கோஹ்லி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த காலிஸ் அரைசதம் கடந்தார்.
இவர் 61 ஓட்டங்களுக்கு அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
தனது
அதிரடியை தொடர்ந்த இங்கிராம், வினய் குமார் ஓவரில் ஒரு சிக்சர், 2
பவுண்டரி விளாசினார். ரெய்னா வலையில் இங்கிராம்(78) சிக்க, நிம்மதி
ஏற்பட்டது.
கடைசி
கட்டத்தில் மிரட்டிய ஆன்டாங் 22 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி
20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 219 ஓட்டங்கள் குவித்தது. பெகர்தின்(20),
ஆல்பி மார்கல்(16) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடின
இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர், உத்தப்பா இணைந்து அசத்தல்
தொடக்கம் கொடுத்தனர். ஆல்பி மார்கல் ஓவரில் காம்பிர் ஒரு சிக்சர், 2
பவுண்டரி அடித்தார்.
இருவரும்
தொடர்ந்து பவுண்டரிகளாக விளாச இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த
நேரத்தில் மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 7.5
ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
உத்தப்பா(18),
காம்பிர்(49) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி,
இந்திய அணி 7.5 ஓவரில் 82 ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும். 11 ஓட்டங்கள்
குறைவாக எடுத்திருந்ததால் தோல்வி அடைய நேரிட்டது.
ka