சிரேஷ்ட
ஊடகவியலாளர் போதல ஜயந்தவை தாக்கி, தாமே நாட்டை விட்டு வெளியேற்றியதாக
அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக
பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக ஐந்து கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேர்வின் சில்வா அண்மையில் வெளியிட்ட சில கருத்துக்கள் தொடர்பில்
விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன
தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “நான் தப்பிச் சென்றதாக தகவல்களை பிரசாரம் செய்யும் நபர்கள்,
குரங்குகளாகவே கருதப்பட வேண்டும். மக்களுக்கு நேர்மையாக சேவையற்றும்
பிரதிநிதி என்ற ரீதியில் எவருக்கும் அஞ்சப் போவதில்லை எனவும் ஜப்பானுக்கு
விஜயம் செய்ததனைத் தொடர்ந்து, சிலர் பிழையான பிரச்சாரம் செய்ய
ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.