‘2012
– எக்ஸ்போ’ சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (28) ஆரம்பித்து வைத்தார். இங்கு உரையாற்றிய அவர், 30 வருடங்களுக்கு மேல்
இலங்கையின் அபிவிருத்திக்கு தடையை எற்படுத்திக் கொண்டிருந்த தீவிரவாதச் செயல்களுக்குச்
சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்காது எனத் தான் நம்புவதாக
நம்பிக்கை தெரிவித்தார். தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் நபர்களின்
முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் அவர் அங்கு கூறினார்.