
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபையில் 19 வது அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இவ் இறுதி நாள் அன்றே அமெரிக்க பிரேரணை மிதான வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா இதுவரை உத்தியோக பூர்வமாக ஒரு முடிவு அறிவிக்காத நிலையில் நோர்வே போன்ற பல மேற்குலக நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு வலுவான ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
எனினும் இலங்கை அரசினால் செயற்படுத்தப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்.
இதேவேளை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் எனவும் இந்திய கட்சிகள் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.