இந்த காலப்பகுதிக்குள் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் குறித்து 32 சம்பவங்கள் பதிவாகியுள்ளாக யாழ். ஆதார வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் தற்போது அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவிடம் வினவியபோது, காலம் மற்றும் சூழல் மாற்றங்களினாலா இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளதா? என்பதில் ஐயம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.
வாழ்க்கை மற்றும் கலாசாரம் என்பவற்றைப் பாதிக்கும் வகையிலான நடத்தை மாற்றங்களே இத்தகைய சம்பவங்களின் அதிகரிப்புக்குக் காரணம் என தாம் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த விடயம் குறி்த்து ஆழமாக சிந்தித்து சமூகத்தை தெளிவுபடுத்தும் அதேவேளை கடும் சட்டங்களையும் உருவாக்க வேண்டடியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.