கம்பஹா
மாவட்டத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவர் தன்னிடம் 250 மில்லியன்
ரூபாவைக் கப்பமாகக் கேட்டு மிரட்டி வருகிறார் என மினுவான்கொடையைச் சேர்ந்த
வர்த்தகர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனியார்
கம்பனி ஒன்றின் முகாமைத்துவப் பணிப்பாளரான சிந்தக பெரேரா என்பவரே இந்த
விடயம் குறித்து கடந்த மாதம் 27 ஆம் திகதி மினுவாங்கொடை பொலிஸில்
முறைப்பாடு செய்துள்ளதுடன் ஜனாதிபதிக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள இது குறித்த கடிதத்தில், காணி ஒன்றைக்
கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதாகவும் அதற்காகத் தனக்கு 250 மில்லியன்
ரூபாவை வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்காத விடத்து தன்னைக் கொலை
செய்யப் போவதாக குறித்த பிரதியமைச்சர் தனது கைத் தொலைபேசியில் மிரட்டினார்
என்றும் தெரிவித்துள்ளார்.