இலங்கைப்
படையினருக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு சீனா
உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ஷ, இதன்முதற்கட்டமாக 120 இலங்கைப் படையினர் இராணுவப்
பயிற்சிக்காக இந்த வருடத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சீன அரசின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக அமைவதாகவும், கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது சீன அரசு
பெரியளவு ஒத்துழைப்புகளை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த வருடத்திற்குள் இலங்கைப் படையினர் 120 பேருக்கு சீனாவில் பயிற்சிகளிக்க
அந்நாட்டு அரசு இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அந்த
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு
அதிகளவு இராணுவ உதவிகளை வழங்கும் நாடாகச் சீனாவே இப்போத உள்ளதமை
குறிப்பிடத்தக்கது.