கஹாவத்தை
இரட்டை கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்தாக அறிந்த
பொதுமக்கள் அப்பகுதியிலுள்ள இரு வீடுகளை தீக்கிரையாக்கியதையடுத்து
கஹாவத்தை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இவ்விரு வீடுகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரரே சபை
அங்கத்தவருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரின்
சகோதரருக்கும் சொந்தமானதாகும்.
நயண நல்மினி (52) எனும் பெண்ணும் அவரின் மகளான காவிந்த்யா
சத்துராங்கனியும் (19) கடந்த ஜனவரி 31- பெப்ரவரி 2 ஆம்
திகதிகளுக்கிடைப்பட்ட நாட்களில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

