பணிப்
பெண்களாக வெளிநாடு செல்பவர்களின் வயதெல்லை 30ஆக அதிகரிக்கப்படும் என
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்கவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான்
பெரேரா தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
முன்னர் 18ஆக இருந்த இந்த வயதெல்லை 21ஆக அதிகரிக்கப்பட்டது. தற்பொது இதனை 30 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பணிப்பெண்களாக செல்வதைக் கட்டுப்படுத்தவூம் அவர்களுக்கு தரம்
உயர்ந்த நிலையில் சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவூம்
அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதேவேளை முதற்தடவையாக வெளிநாடு செல்லும் ஆண்களின் வீதம் பெண்களைவிட
அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 55.2 வீதம் ஆண்கள் சென்றுள்ளதுடன் பெண்கள்
44.98 வீதமே சென்றுள்ளனர்.