இலங்கை
அணியின் லசித் மலிங்க இலங்கை அணிக்காக மீண்டும் சிறப்பாகப் பந்துவீசுவார்
எனவும், அவரின் ஃபோர்ம் தொடர்பாக எந்தவிதப் பிரச்சினைகளும் கிடையாது எனவும்
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சம்பக்க ராமநாயக்க
தெரிவித்துள்ளார்.
லசித் மலிங்க தொடர்ச்சியாக இலங்கை அணிக்காக போட்டிகளில் பங்குபற்றிவந்த நிலையில், ஓரிரண்டு போட்டிகளில் அவர் சிறப்பாகப் பந்துவீசமுடியாது போனமை இயற்கையானது எனவும் தெரிவித்தார்.
அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரில் லசித் மலிங்க சில போட்டிகளில் மிகச்சிறப்பாகவும், சில போட்டிகளில் மோசமாகவும் பந்துவீசியிருந்தார். அத்தொடரில் 18 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக லசித் மலிங்க காணப்பட்ட போதிலும், ஓர் ஓவருக்கு சராசரியாக 6.21 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் பெரிதளவுக்கு றிவேர்ஸ் ஸ்விங் கிடைக்காத காரணத்தாலும், லசித் மலிங்க தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்குபற்றியதன் காரணமாகவும் அவரால் அத்தொடரில் எதிர்பார்க்கப்பட்டளவிற்கு சிறப்பாகப் பந்துவீச முடியாது போனதாகவும் தெரிவித்தார். குறிப்பாக தொடரின் இறுதியில் இலங்கை அணி 10 நாட்களில் 5 போட்டிகளில் பங்குபற்றியிருந்தது.
இந்தியாவுக்கெதிரான முதலாவது ஆசியக்கிண்ணப் போட்டித் தொடரில் லசித் மலிங்க பங்குபற்றியிருக்கவில்லை. அவருக்கு அப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது