பாகிஸ்தான்-இங்கிலாந்து
அணிகளுக்குக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 130
ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்று அபுதாபியில்
தொடங்கிய இப்போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி
துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதன்படி
முதலில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அணித்தலைவர் குக்
மற்றும் பீட்டர்சன் துடுப்பெடுத்தாடினா். பீட்டர்சன் 14 ஓட்டங்கள் எடுத்த
நிலையில் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் அவரைத் தொடந்து ட்ராட்டும்
அப்ரிடியின் அடுத்த பந்தில் ஓட்டங்கள் எதுவும் இன்றி ஆட்டமிழந்தார்.
அதன்பின்
களமிறங்கிய போபரா அணித்தலைவர் குக்குடன் ஜோடி சேர்ந்த நேர்த்தியாக
விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். போபரா 50 ஓட்டங்கள் எடுத்த
நிலையில் ஆட்டமிழந்தார் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கப்டன் குக்
சதத்தை நிறைவு செய்தார்.
போபராவைத்
தொடர்ந்து களமிறங்கிய மார்கன் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற,
அவரைத் தொடர்ந்து கீஸ்வெட்டர் 9 ஓட்டங்களும், திறமையாக விளையாடிய குக் 137
ஓட்டங்களும், பிராட் 1 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில்
இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 260 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை
இழந்தது. அந்த அணியில் படேல் 17 ஓட்டங்களுடனும், ஸ்வான் 13 ஓட்டங்களுடனும்
ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியில் அஜ்மல் 5
விக்கெட்டுகளும், அப்ரிடி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத்
தொடர்ந்து 261 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான்
களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய முஹமது கபீஸ் 5 ஓட்டங்களும், ஷபீக்
ஓட்டங்கள் எதுவுமின்றியும், யூனிஸ்கான் 15 ஓட்டங்களும், இம்ரான் பர்ஹட் 10
ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்
ஃபின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹபிஸ்
5 ஓட்டங்களும் இம்ரான் 10 ஓட்டங்களும், ஆசாத் ஸாபிக் ஓட்டங்கள் எதுவும்
இன்றியும் ஆட்டமிழந்தனர் மிஸ்பா 14 ஓட்டங்களும் யூனிஸ் கான் 15 ஓட்டங்களும்
சோயிப் மாலிக் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர் உமர் அக்மல் 22 ஓட்டங்களும்
அப்ரிடி 28 ஓட்டங்களும் உமர் குல் 2 ஓட்டங்களும் சாயித் அஜ்மல் 5
ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில்
பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130
ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
அடைந்தது.