உலகின் மிக விலை உயர்ந்த கேக்கை தயாரித்த பெருமை இவ்வருடம் இலங்கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நாட்டின்
பிரபல ஹோட்டல்களில் ஒன்றான Heritance Ahungalla நீலக் கற்கள் பதிக்கப்பட்ட
கேக் ஒன்றை தயாரித்து உள்ளது. பதிக்கப்பட்டு இருக்கின்ற கற்களின் மொத்த
பெறுமதி 35 மில்லியன் அமெரிக்க டொலர்.
பத்து
அடுக்குகள் கொண்டது இக்கேக். கப்பலின் தோற்றத்தை கொண்டு இருக்கின்றது.
கடல் காட்சியை நினைவுபடுத்துகின்றது. Heritance Ahungalla ஹோட்டல்
கடலோரத்தில் அமைந்திருப்பதால்தான்
சமையல்
கலையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிபுணர் திமுது குமாரசிங்க இரத்தினக்
கற்கள், விதம் விதமான வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வெகு
நேர்த்தியாக இக்கேக்கை ஆக்கி இருக்கின்றார்.
இலங்கை,
இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிறிக்கெற் அணிகளைச் சேர்ந்த வீரர்கள்
இக்கேக்கை பார்வையிடுகின்றமைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த
கேக்கை வாங்க போகின்ற அதிஷ்டசாலி யார்? என்று ஹோட்டல் நிர்வாகத்தினர்
மாத்திரம் அன்றி அனைத்துத் தரப்பினருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு
இருக்கின்றார்கள்.