கொழும்பு
தேசிய நூதனசாலையில் அண்மையில் இடம்பெற்ற புராதன பொருட்கள் திருட்டுத்
தொடர்பில் இதுவரை 58 பேரிடம் தாம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக இரகசியப்
பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (28) தெரிவித்தனர்.
நூதனசாலையில் பொருத்தப்பட்டிருந்த
பாதுகாப்பு கமரா செயலிழந்தமை குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்திடம்
அறிக்கை கோரியுள்ளதாகவும் அது இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி
முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இரகசிய பொலிஸார்
இந்தத் தகவல்களை வெளியிட்டனர்.
மேலும் நூதனசாலை நிலத்திலிருந்து பெறப்பட்ட
ஒரு வகைத் திரவத்தின் படிமம் டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த
வழக்கின் விசாரணை மே மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.