தம்மால்
உற்பத்தி செய்யப்படும் நெல்லை கிலோ 40 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யுமாறும்
தங்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்குமாறும் கோரி தமபுள்ளவையில் நேற்று
விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெரும்பாலான விவசாயிகள் கோவணத்துடன் காணப்பட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தை அகில இலங்கை விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
தம்மால் உற்பத்தி செய்யப்படும் நெல்லை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவுக்கு
கொள்வனவு செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க
வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோஷமெழுப்பினர்.
தற்போது தம்மிடமிருந்து ஒரு கிலோ நெல் ரூபா 22 தொடக்கம் 23 ரூபா வரைக்குமே
கொள்வனவு செய்யப்படுவதாகவும் ஆனால் அந்த நெல் அரிசியாக்கப்பட்டு கிலோ 70
ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அங்கு
தெரிவிக்கப்பட்டது.