
1789ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரிசில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தியதுடன் ஆணுக்கு நிகராக சமுதாயத்தில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அணிதிரண்டனர்.
இதனையடுத்து ஐரோப்பாவிலும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டதுடன் கிரீஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண்களும் தங்கள் உரிமைகளுக்காக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பிரான்ஸின் புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் அளித்த தினமான 1848 ஆம் ஆண்டின் மார்ச் 8ஆம் திகதி, சர்வதேச மகளிர் தினமாக அமைவதற்கு வித்தாக அமைந்தது.
கிராமப்புற பெண்களை பலப்படுத்துதல் மற்றும் வறுமையை ஒழித்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

