

கிராமப்புற பெண்களை பலப்படுத்துதல் மற்றும் வறுமையை ஒழித்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இலங்கை இம்முறை புதிய தொனிப்பொருளொன்றின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குறிப்பிட்டார்.
பெண் பிள்ளைகளைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த வருடம் மகளிர் தின செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச மகளிர் தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கூறினார்.
இதேவேளை, பெண்களைத் துன்புறுத்துவோருக்கு பொது மன்னிப்பு வழங்காமல் கடூழிய ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாகவும் எதிர்காலத்தில் பெண்களைத் துன்புறுத்துவோருக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


