தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை (02)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பம்பலபிட்டி அலுவலகத்தில் அவசரமாகக்
கூடவுள்ளது.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அண்மையில் ஜனாதிபதி சம்பந்தனுக்கு இடையில் இடம்பெற்ற திடீர் சந்திப்பை அடுத்து ஜெனீவா பயணம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என சம்பந்தன் அறிவித்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
சம்பந்தன், சுமந்திரன் இருவரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்ததாகவும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூற, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவே என சம்பந்தன் அறிவித்தார்.
இந்த நிலையில் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜெனீவா செல்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவில்லை எனவும் சம்பந்தன் முடிவை எடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தல் மாத்திரம் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுவாக கூடி கலந்தாலோசித்தால் கூட்டமைப்பு ஜெனீவா செல்ல வேண்டியது அவசியம் என்பதையே அதிகபடியான பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவர் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்தார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் நாட்களில் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் என்பது புலனாகிறது.
இருந்த போதும் நாளை (02) கூடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்திற்காக பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதேவேளை, ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு ஆதரவு அளிக்குதாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 47 நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இது குறித்து சம்பந்தனிடன் அத தெரண தமிழிணையம் வினவியபோது, இது குறித்து ஊடகங்களுடன் கருத்து பகிர தான் விரும்பவில்லை எனவும் அப்படி தகவல் இருப்பின் நேரம் வரும்போது வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடிதம் அனுப்பப்பட்டதை மறுக்காத சம்பந்தன், ஊடகங்கள் இவ்வாறான விடயங்களை பெரிதுபடுத்தக் கூடாது எனவும் அத தெரண தமிழிணையத்திடம் குறிப்பிட்டார்.
ஜெனீவா மாநாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் நாம் முன்னர் வெளியிட்ட செய்திகளை கீழே காண்க...